24 செப்டெம்பர் 2011 காலையில் சச்சினுடன் காரில் குவைத்தில் உள்ள AVENUES MALL-க்குப் போனோம்.மத்திய கிழக்கு நாடுகளில் இதுதான் பெரியது.அதில் பெரிய கடைகள் பல இருப்பதாக தெரிய வந்தது. நாங்கள் போனது IKEA SHOW ROOM. இது போல் பல உள்ளன. ஒவ்வொரு க்ஷோ ரூமுக்கும் தனிதனியாக கார் பார்க்கிங் உள்ளது. இதற்கு மாத்திரம் 500-க்கும் அதிகமான கார்கள் நிறுத்தலாம்.பச்சை விளக்கு எரிந்து கொண்டிருக்கும் பார்க்கிங்க் ப்ளேஷ்-ல் கொண்டு காரை விட்டதும் சிவப்பு விழக்கு எரியும். கார்கள் அதிகம் ஆனதும் எங்கு இடம் காலியாய் இருக்கிறது என்பது நுளைவாசலில் கார் வரும்போதே தெரிந்து கொள்ளலாம்.
மணி 9.30.இன்னமும் திறக்கவில்லை.10 மணியாகும்.....
Columbus Cafe-ல் காபி குடிக்கலாமா எனச் சச்சின் கேட்டான்.வேண்டாமே என நான் சொன்னதை கண்டு கொள்ளவே இல்லை.காப்பிக் கொட்டையை பொடியாக்கி ஒரு கப்பில் பிடிக்கிறாள்.பின் அதுபோல் சீனி,பால்,சாக்லேட் ஃப்ளேவர் பிடித்து மூடி சூடாகத் தந்தாள்.கை சுடாமல் இருக்க கப்பை கட்டியான அட்டை வளையத்தில் வைத்துத் தந்ததினால் கையில் சூடு தெரியவில்லை.மூடியில் சிறிய சதுர வடிவிலான துவாரம்.வாய் வைத்து குடிக்கும்போது ரெம்பவும் சரிக்காமல் இருக்க மேல் உதடு பதிய செவ்வக வடிவிலான பள்ளம் மூடியிலிருந்தது. நான் குடித்தேன்.....சூடு அதிகம்....coffee is fine....super....
ஒரு கப் காப்யின் விலை 1.4 KD .காப்பி குடித்து முடிக்கவே 20 நிமிட ஆனது. மணியும் பத்தானது.அங்கு போய் பொருட்காட்சியில் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தேன். நம்ம ஊர் உளுந்த வடை இருந்தது.வித விதமான மீன்கள்,.....ஒட்டக மீட்,....
பேட்டரிக் காரில் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தான் ஒருவன். என்னண்ணு பாத்தால் தரையை clean செய்து கொண்டே போகிறது கார்.
சச்சின் தரையில் போட Fancy mat வாங்கினான் .
360 டிக்ரீ மால் தான் பெரிதென நினைத்தேன்.அது வட்ட வடிவமானது.ஆனால் அதைவிட இதுதான் பெரியது என நினைக்கிறேன்.
Vaasthu செடி வாங்க போனோம். வித விதமான பலவகைச் செடிகளை முதன் முதலாகப் பார்த்தேன்.வீட்டின் உள்ளே வளர்க்க,வெளியே வளர்க்க என்று தனித் தனியாக ஷோ ரூம் இருக்கிறது.Friday Market-க்குப் போய் fish food வாங்கினோம்.பச்சைக்கிளி,வெள்ளிக்கிளி. குருவி,....தவளை....கடல் நீரில் வளக்க கடல்வாழ் உயிரினங்கள் (என் வாழ்நாளில் இது வரை பார்த்ததில்லை) பாத்தேன்.
Cleaning materials வாங்க ஒரு கடைக்குப் போனோம்.
LULU HYPERMARKET-க்கு போனோம். அதுவும் பெரிய மால்தான்.சாப்பிடும் நேரம் நெருங்கியதால் ஸேண்ட் விச் சாப்பிட்டோம்.
அதன் பிறகு கார்ப்பெட் கடைக்குப் போனோம்.
எங்களுடன் சச்சினின் அத்தை மகன்( குவைத்தில் வேலை பார்க்கிறார்) எங்களுடன் வந்தார்.
சால்மியா ஹோட்டலுக்குப் போய் தோசை சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேரும்போது மணி 4.
No comments:
Post a Comment