நான் ஒன்றாம் வகுப்பில் 1952-ல் படித்து 1956-57ல் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன்.
அப்பொழுது தலைமை ஆசிரியர் காட்டுப்புதூர் ராமன்பிள்ளை சார்.அவர்களுடன் பூதப்பாண்டி சுப்பிரமணியபிள்ளை சார்,தெரிசனம்கோப்பு பகவதிப்பெருமாள் செட்டியார் சார், ஞானம் சுப்பிரமணியபிள்ளை சார்,திட்டுவிளயில் இருந்து ஒரு ஆசிரியர் இருந்தார்கள்.
தினமும் தேசியகீதம் தனை 5-ம் வகுப்பு மாணவிகள் பாடிய பின் தான் வகுப்புகள் ஆரம்பம் ஆகும்.அப்பொழுதெல்லாம் 5-ம் வகுப்பு மட்டும்தான் காலை,மாலை நேரம் நடைபெறும். 1-2-ஆம் வகுப்புகள் காலை மட்டும் நடக்கும்.3-4 ஆம் வகுப்புகள் மத்தியானத்திற்குப் பிறகு நடை பெறும்.
கடுக்கரை ஊரில் பிறந்த ஆசிரியர்கள்:-
வடக்குத்தெரு வடக்குவீட்டு ரா. சுப்பிரமணியபிள்ளை.
வடக்குத்தெரு வடக்குவீட்டு மா.கோலப்பபிள்ளை
வடக்குத்தெரு வடக்குவீட்டு மா.அணஞ்சபெருமாள் பிள்ளை(முருகன்)
தெக்குத்தெரு பூ.அருணாசலம் பிள்ளை
மேலத்தெரு ஆ.குமார்
மேலத்தெரு க.நாகெந்திரன்பிள்ளை.
தரிசு தங்கப்பன் மகன் வேலாயுதம் பிள்ளை
தெக்குத்தெரு டாக்டர் சொ.பேச்சினாதன்.
வடக்குத்தெரு நீ.தாணுகிருஷ்ணன்
வடக்குத்தெரு சு.மாதேவன் பிள்ளை
வடக்குத்தெரு அ. ஆறுமுகம் பிள்ளை
தரிசு வீட்டு ஆ. பொன்னப்ப பிள்ளை
No comments:
Post a Comment