Tuesday, September 13, 2011

என் குவைத் பயணம்...............3

..குவைத் பயணத்தில் ஏற்பட்ட அனுபவத்தின் தொடர்ச்சி

விமான செக்கிங்க் முடிந்ததும் உள்ளே போனோம். அப்பொழுது ஒருவர் நீங்கள் கத்தார் ஏர்வேய்ஸ்-பயணிதானே. அதோ அந்தக் கேட் வழியே போங்கள் என்றார். நாங்களும் போனோம்.வாசலில் நின்றவர் அணிந்த உடையை வைத்து இவர் கத்தார் ஏர்வேய்ஸ் ஸ்டாஃபாகத்தான் இருக்க வேண்டும் என நினைத்து அவளிடம் நான்,எங்கள் போர்டிங்க் பாஸைக் காண்பித்து எனக்கு தோஹா வரைதானே பாஸ் தந்திருக்கிறார்கள்.குவைத்துக்கு பாஸ் எப்பம் தருவாங்க ? எனக் கேட்டேன்.உடனே அவள் யாருக்கோ போண் பண்ணிக் கேட்டு என்னிடம் உங்களுக்கு தொஹாவில் தருவார்கள் எனக் கூறினாள்.

வேகமாகப் போய் விமானத்தின் வாசலின் அருகே போனதும் அங்கு நின்றிருந்த விமானப்பணிப்பெண்ணிடம் என் மனக்குறையைக் கூறினேன்

”உங்களிடம் இருக்கும் wallet, orange colour border -ல இருக்கும். அதனை தோஹாவில் இறங்கியதும் தெரியும்படி கையில் வைத்துக் கொள்ளுங்க.தோஹா-வுக்கு போகிறவர்கள் ஒருவாசல் வழியாக இறங்குவார்கள். உங்களை அடுத்த வாசல் வழியே இறங்க வழி காட்டுவார்கள். உங்களுக்கு அங்கே வேறொரு போர்டிங்க் பாஸ் தருவார்கள்.”

இப்போ கொஞ்சம் நம்பிக்கை வந்தது...

விமானம்(எண்;-QR 241 ).....உள்ளே நுழைந்ததும் எங்களுக்கான சீட்டில் போய் இருந்தோம்.அது மூன்று பேர் இருக்கும் சீட்.ஜன்னல் ஓரம் வேறு யாரோ ஒரு பெண்.

35 நிமிடம் லேட்டாய் விமானம் புறப்பட ஆயத்தமானது. என் முன்னே இருந்த ஸ்கரீனில் "WELCOME to QUATAR AIRWAYS" தெரிந்தது.

பணிப்பெண்கள் ஒவ்வொரு சீட்டில் இருப்பவர்களும் சீட் பெல்டை அணிந்திருக்கிறார்களா எனப்பார்த்து கட்ட வில்லையெனில் கட்டுவதற்கு உதவி செய்து வந்தார்கள்.

என் மனைவி என்னிடம்,“முதன் முதலாக இவர்களை பார்த்ததும் பொம்மண்ணுல்லா நினைத்தேன்”

32000 அடி உயரம் வரை விமானம் வானில் பறக்கும் என கேப்டன் அறிவித்தது என் காதில் விழுந்தது.கொஞ்சம் கொஞ்சமாக வானில் பறக்கும் உயரம் அதிகமாகி 32000 அடி வந்ததும் அதன் பிறகு அதே உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.சூடாய் இருந்த துணி(Hot wipes) தந்தார்கள். எதற்கு அது....! முகத்தை யாரோ துடைப்பதைப் பார்த்தேன்.

காலை உணவினை அந்த பொம்மைகளே கொண்டு வந்து தந்தனர்.

ரவஉப்புமா ,பன்னு,சாம்பார்,அடைப்பாயசம்,பைனாப்பிள்,பப்பாளி,தர்பூசனி,க்ரேப்ஸ்,மேங்கோ ஜூஸ்,ஜாம்,சீனி,மில்க்,.....எல்லாமே இருந்தது. சீனி இருந்த அந்த உருண்டை வடிவ பேக்கிங்கே பார்க்க ஆச்சரியமாக இருந்தது. கை துடைக்க துணி,குடிக்க தண்ணீர் எல்லாமே தந்தனர். Liquor தருவார்கள் கத்தார் ஏர்வேய்ஸ்ல என்றெல்லாம் சொன்னர்களே....!

எல்லோரும் டி.வி பார்க்கத் தொடங்கினர்.எனது பக்கத்தில் இருந்தவர்கள் மலையாள சினிமா,இந்திப் படம்,விஜய் நடித்த காவலன் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஏனோ தெரியவில்லை...எனக்கு எதிலும் இண்ட்ரெஸ்ட் இல்லை.டச் ஸ்க்றீன் தானே. ஒவ்வொன்றாய் தேடிப் பார்த்துக் கொண்டிருந்தேன்......கத்தார் ஏர்வேய்ஸ் கண்ணில் பட்டது.

அதன் பிறகு நான் பார்த்தது இதுதான்

Flight Status----Time to Doha......3.36,

Distance to Doha.....1836 mile.,

Estimated Arrival Time......7.07 a.m

Fljght Information------Ground speed.....555 mph,

Altitude....29000 ft(8839 m)

out side temperature.....-27 degree C.

Aftr some time ,I found the particulars as-----

Altitude.....32000ft,seed....538 mph (866 km/h)......

17 நிமிடம் லேட்டாதான் தோஹா போய் சேரும் போல் தெரிகிறது. 7.45க்கு குவைத் ஃப்ளைய்ட்.அரை மணிக்கூரில் நமக்கு போர்டிங்க் பாஸ் கிடைக்குமா ? கிடைக்காட்டா என்ன செய்வது ஒண்ணுமே புரியல்ல......எப்படியும் நம்மை அவர்களே கூட்டிட்டுப் போய்விடுவார்களே....எப்படி நம்மை விட்டுவிட்டுப் போவார்கள்...! பயம் சற்றும் இல்லை...மனம் சமாதானம் ஆனது,

ஏதோ மனைவியிடம் சொல்ல பக்கத்தில் பார்க்க அவள் நிம்மதியாக உறங்கிட்டிருந்தா.....முந்தின நாள் தூங்கவே இல்லைல்லா.....மலர்களைப் போல் மனைவி உறங்குகின்றாள்...உறங்கட்டும்....இன்னும் இரண்டு மணி நேரத்தில் பேரனைப் பார்க்கப் போகிறோம் என்ற உற்சாகம் அவள் ஆள்மனதில் இருப்பதால் நிம்மதியாகத் தூங்குகிறாள்.

என்னுடைய வாச்சைப் பார்த்தேன்.மணி 9. தோஹாவில் லேண்டாகப்போகிறது என்ற அறிவிப்பு......அதன் பிறகு 40 நிமிடம் கழிந்து லேண்டானது.விமானத்தை விட்டு வெளியே வந்ததும் காத்திருந்தோம்.ஒரு பஸ் வந்தது.இன்னொரு இடத்தில் இறக்கி விட்டார்கள். சரியான வழிகாட்டுதலால் ட்ரான்ஸ்ஃபெர் செக்ஸனில் போய் போர்டிங்க் பாஸ் கேட்டேன்.

இடி தலையில் விழுந்தது போல் இருந்தது.the flight has gone.We announced your name. Where did you go?

என் முகம் பேயறைந்தது போலிருந்தது.என்னவோ சொன்னேன்.என்ன சொன்னேன் இப்போ வரை சத்தியமாக எனக்கு ஓர்மையே இல்லை.

"You dont worry....you can go to Kuwait by next flight at 1 o'clock.Now the time is 8
come here again by 11.30 .I will give you boarding pass."

வயிற்றில் பால் வார்த்தது மாதிரி இருந்தது இன்பத்தேன் வந்து பாய்ந்தது காதினிலே...உயிரும் உணர்வும் வந்தது. அய்யோ லக்கேஜின் கதி என்ன ?

அவளிடமே அது பற்றி கேட்டேன்." we took it. it is safe.... dont worry"

அப்பாடா....நிம்மதி.......என்னையே அறியாமல்,”Thank you very much" என்றேன்.

அவள் என்னை கூப்பிட்டாள். "What is your time in your watch.?"

i told "it shows Indian time."

She asked me to adjust the watch to Doha time .I adjusted as she told.

பட படப்புடன் இருந்ததை அவள் கவனித்தாள். அவள் என்னிடம்,“ Go to the right hand side of you and take your breakfast at the restaraunt."

கீழ்படிந்த மாணவன் போல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன்.

நானும் அவளும் ஒரு இடத்தில் போய் இருந்து ஆசுவாசப்படுத்திக் கொண்டோம்.

என் மனவியைப் பார்த்து,” என்ன பயந்துட்டியா?” கேட்டேன்.அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை. ஆனாலும்,” நீங்க ஏங்கூடதானே இருக்கீங்க.நம்மளக் காணாம தினேஷ் பயந்திருவானே.அதான் எனக்கு பயமாக இருக்கிறது.”என்றாள்.

அப்பொழுது அந்தப் பக்கமாக வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒருவன் எங்களிடம் தமிழில் என்ன ஃப்ளைட்டை விட்டு விட்டீர்களா எனக் கேட்டான். ஆமாம் என்று சொல்லி விட்டு எந்த ஊர் தமிழ் நாடா ? எனக் கேட்டேன்.ஸ்ரீலங்கா என்றான்.

அவன்,”நீங்கள் சாப்பிட்டீர்களா” கேட்டான். நான் என்னிடம் இந்தியன் மணிதான் இருக்கிறது எனக் கூறவே அவன்,”சாப்பாடு ஃப்ரீதான்...நீஙகள ஒரு துண்டு வாங்கீட்டு போங்கோ” சொன்னான்.

நான் மறுபடியும் அந்தப் பெண்ணிடமே போய் என்னிடம் இந்தியன் மணிதான் இருக்கிறது என சொன்னேன்.

அவள்,” Oh! I am very sorry. I have forgotten..." என்று ஒரு துண்டுத்தாளில்

“KAREN,PLS GIVE HIM 2 VOUCHER thanks !"என எழுதி தந்தாள்.

2 வவுச்சர் வாங்கி கொண்டு ரெஸ்டாரண்டில் கொடுத்தேன். ஒரு ப்ரட் ,முட்டை ஆம்ப்ளேட்,உருளைக்கிழங்கு ஃபிங்கெர் சிப்ஸ் தந்தான்.அன்று திருவோணம் என்பதால் அவள் முட்டை சாப்பிடவில்லை.தந்ததை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு மீதியை வேஸ்ட் பாக்ஸில் போட்டோம்.

என் மனவி,” நீங்க அந்த பொம்ப்ளேட்ட போய் சொல்லி தினேஷுக்கு போண் பண்ணுங்கோ.அவ எவ்வளவு அருமையாய் இருக்கா”

டெலிபோண் கார்டு வாங்கலாம்......கத்தார் மணி இல்லையே.....கேட்டுதான் பார்ப்போமே
போய் கேட்டோம். 500/-ருபாய்...20 நிமிடம் பேசலாம்......வேண்டாம்..வேண்டவே வேண்டாம்....

வாச்சைப் பார்த்தேன். மணி 9.இரண்டரை மணிக்கூர் இருக்கிறதே.....என்ன செய்ய...
எப்படியோ மணி 11.30 ஆனது....அந்தக் கௌண்டர் அருகே போனேன்.இப்போ அப்போதிருந்தவள் இல்லை, வேறொரு பெண் இருந்தாள்.

அவளிடம் போய் கேட்டேன்.12 மணிக்கு வாருங்கள் என்றாள். என்னை இந்தச்சமயத்தில் வரச்சொன்னதைச் சொன்ன உடனே போர்டிங்க் பாசைதந்து 16-ம் நம்பர் கேட்டுக்கு 12.15 மணிக்கு போகச் சொன்னாள்.

 


அங்கு போய் இருந்தோம்.12 மணிக்கே கூப்பிட்டார்கள் எல்லாவற்றையும் கொடுத்து லக்கேஜ் பற்றிக் கேட்டேன்.அவன் உடனே கம்ப்யூட்டரில் பார்த்து 3 பெட்டிகள் எனச் சரியாகச் சொன்னதால் மனதுக்கு நிம்மதியாய் இருந்தது.

கீழ்த்தளத்தில் எஸ்கலேட்டர் மூலம் இறங்கிக் காத்திருந்தோம்.ஒரு பஸ் வந்து அழைத்துச் சென்றது. விமானத்தில் ஏறினோம்.எண்:QR 140

கடைசி வரிசையில் போய் இருந்தோம்.ஒரு மணிக்குப் போக வேண்டிய விமானம் 1.25-க்கு புறப்பட்டது.

என் மனைவி,”எப்பம் குவைத்துக்கு இது போகும்” கேட்டாள்.

2.45 க்குப் போயிரும்

அவள் முகம் பளிச்சென்று மகிழ்ச்சியால் மலர்ந்திருந்தது.என் மனமும்தான்.

நாடு விட்டு நாடு வந்த முதல் அனுபவம் ,கத்தார் ஏர்வேய்ஸின் முறையான செயல் பாடு...
அனைத்துமே என்றும் என் நினைவில் பசுமையாக இருக்கும்

5 மணிக்கூருக்கும் அதிகமாக தோஹாவில் காத்திருந்த போது 11 மணிக்கு ஒருவர் எங்களிடம் வந்து விசாரித்தார்....லஞ்ச் ரெடியாய் இருகிறது....சாப்பிடலாமே.... வாருங்கள் என அழைத்தது விமானத்தை தவற விட்ட சோகத்தை அடியோடு மறக்கச் செய்து விட்டது...

முந்தின விமானத்தில் நாங்கள் இருந்த சீட்டில் ஜன்னல் பக்கம் இருந்த அந்தப் பெண் ஒரு research scholar.யாரது...? நாங்கள் இறங்கும் போதுதான் தெரிந்தது அவள் எங்களுக்குத் தெரிந்த ஒரு டாக்டரின் சொந்தக்காரர் என.......

 

No comments:

Post a Comment