Thursday, September 29, 2011

மேல்மாடிகளை இணைக்கும் நடைபாதை

 

நானும் மகாதேவனும் 3 மணிக்கு மங்காஃபில் இருந்து புறப்பட்டு சபாத்துக்குப் போனோம்.அவரது இந்திய நண்பர் அலுவலக வேலையாக குவைத்துக்கு வந்தார்.அவர் ஆந்திராவைச் சேர்ந்தவர்.பெங்களூரில் வேலை பார்ப்பவர்.அவர் படித்தது திருச்சி N.I.T -ல். நான் நாகர்கோவில் இருந்து வந்திருக்கிறேன் என்று சொன்னதும் அவர் கன்னியாகுமரிக்கு அவரது அப்பாவுடன் வந்ததைக் கூறினார். அவரது வயது 24. Civil HOD Dr.C,Natarajan-தெரியுமா எனக் கேட்க தெரியும் என்றார்.

நாங்கள் மூவரும் சால்மியாவில் உள்ள சில இடங்களுக்குப் போனோம்.இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி. Banana leaf Restaurant-ஐ காட்டினார். நம் ஊர் உளுந்த வடை,மிளகு பஜ்ஜி,சமோசா,பக்கடா எல்லாம் வாங்கி சாப்பிட்டோம்.மிகவும் ருசியாக இருந்தது.அவர் எங்களிடம் இருந்து விடைபெற்று அவரது ரூமுக்குப் போனார்.

நாங்கள் இருவரும் CITY CENTRE-க்கு சும்மா நேரம் போவதுக்கு வேண்டி போனோம்.

மரீனா மால்-க்குப் போனோம்.எல்லாப் பொருள்களின் விலயும் நம்மால் கற்பனையில் கூட வாஙக முடியாத எட்டாத விலை ...ஒரு வாச்சின் விலை 1000 K.D (178000/-)

நான் கண்டு அதிசயித்தது விலையைப் பற்றியே அல்ல.ஒரு வித்தியசமான நடைபாதைதான் அது.
மரீனா மால் சாலைகளின் இரண்டு பக்கத்திலும் அமைந்திருக்கின்றன .ஒரு கட்டிடத்தின் மேல்மாடியில் ஏறி ஒரு அழகான நீண்ட நடைபாதையில் நடந்து சென்றால் அடுத்தபக்கத்தில் உள்ள கடைக்குப் போகலாம்.அந்த நடைபாதையில் இரண்டு இடத்தில் நடக்காமல் நின்றபடியே செல்ல Escalator இருகின்றன.நடைபாதை ஒரு விமானத்தினுள் இருப்பது போன்ற உணர்வு வரும்படியான அமைப்பு.

பார்க்க வேண்டிய எல்லாவற்றையும் பார்த்துவிட்டு ,சாகர் ரெஸ்டாரண்டில் போய் சாப்பிட்டுவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

 
Posted by Picasa

No comments:

Post a Comment