Wednesday, September 14, 2011

என் குவைத் பயணம்..............4

நானும் என் மனைவியும் கத்தார் ஏர்வேய்ஸ்-ன் இரண்டாவது விமானத்தில் ஏறி கடைசி வரிசையில் உள்ள இருக்கையில் போய் அமர்ந்தோம். இப்போ அவள் ஜன்னல் பக்கம்.நான் நடு சீட்டில்.என் பக்கத்தில் எந்த நாடென்றே தெரியாத ஒருவர்.

மணி 1.விமானம் கிளம்ப வேண்டிய நேரம்.ஆனால் புறப்படவில்லை.1.25 மணிக்கு அப்புறம் தான் விமானம் பறக்க ஆரம்பித்தது....இது போல் காலையில் காத்திருந்து எங்களை சுமந்து போகாத விமானத்தை மனதுக்குள் திட்டினேன். காலையில் நடந்த தாமதம் யாரால் எப்படி ஏற்பட்டது.....எல்லாமே என்னால்தான்...50 நிமிட இடைவெளியில் ஒரு கணக்டட் ஃப்ளைட் இருந்தால் அதனை சூஸ் பண்ணியது நான் செய்த குற்றம் தானே....அனுபவம் இல்லாமை..
பாடம் ஒன்று படித்தோம்.கத்தார் ஏர்வேய்ஸ் மிக அழகாக என்னை சமாதானப்படுத்தியமுறை எனக்கு மிகவும் பிடித்தது.

குடிக்க தண்ணீர் தந்தாள் விமானப் பணிப்பெண்....சூடாக சேண்ட்விச் தந்தாள்....


நான் என் மனைவியிடம்,“ திருவனந்தபுரத்தில் இருந்து வரும் போது உன் பக்கத்தில் இருந்த அந்தப் பெண் யார்? எனக் கடைசியில் தானே தெரிந்தது.”

அவளது பெயர்......ஓய்வு பெற்ற IAS Officer-ன் மகள். ஊர் திருவனந்தபுரம்.ஒரு கான்ஃப்ரன்ஸுக்காக அமெரிக்கா போகிறாள். நாகர்கோவில் டாக்டர் ராமசாமியின் உறவினர். என் மனைவி அவளுக்கு தெரிந்த உறவினர்களின் பெயர்களைச் சொல்லவே அவளும் மகிழ்ந்தாள்...

என் மனைவி அவளிடம்,“ ஏன்... நெற்றியில பொட்டு வைக்கல..”

அவள், “ நான் ஜின்ஸும் பனியனும் போட்டதால் தான் பொட்டு வைக்கல்ல?” .

மனம் அசை போட்டது.

நேரம் சரியாக 2.25-க்கு குவைத்துக்கு விமானம் வந்து சேர்ந்தது....என் பை,அவளது பை
இரண்டையும் எடுத்து நான் முன்னே செல்ல அவள் பின்னால் வந்தாள்.

ஒரு பக்கம் Escalator.அதனை அடுத்து படிக்கட்டு. படிக்கட்டின் வழியே கீழே இறங்கி வந்தோம் .வெளி நாட்டவர் என அறிவிப்பு பலகை இருந்த இடத்தின் முன்னே நின்ற வரிசையில் நாஙகளும் சேர்ந்து கொண்டோம். என் முறை வந்தது.எங்களது பாஸ்போர்ட்,விசா எல்லாம் கொடுத்தேன்.அது உங்கள் மனைவியா எனக் கேட்டாள்.....

மேசையின் மீதிருந்த ஒரு மெஷினில் விரலை வைக்கச் சொன்னாள். பின் அடுத்த விரலை வைக்கச் சொன்னாள்.என் மனைவியும் விரலை வைத்தாள்.சீல் வைத்து எல்லாவற்றையும் தந்தாள். ஒரு விசில் சத்தம் கேட்டது. எதிரே இருந்த ஒரு சின்ன உயரம் குறைந்த கதவைத் திறந்து லக்கேஜை எடுக்க எங்கே போகணும் என கண்களால் தேடினேன்.

conveyar belt ஒன்றின் பக்கத்தில் எங்களோடு வந்த ஆட்கள் நின்றிருந்ததைப் பார்த்தேன். நானும் அங்கே போய் நின்றேன்.....லக்கேஜ் வரவில்லை....பகீரென்று இருந்தது.

நான் லக்கேஜ் வரவில்லையே என அங்கேயெ நின்று எழுதி கொண்டிருந்த ஒருவரிடம் கூற .’ எந்த ஃப்ளைட்’ என்றான். தோஹா என நான் சொல்ல அவன் இது அது இல்லை.
அவர் சுட்டிக் காட்டிய இன்னொரு இடத்திற்குப் போனோம்.

நின்றோம். எல்லாப் பொருள்களும் வந்து அவரவர்கள் பெட்டியை எடுத்துச் சென்றனர்.அவளையும் கிட்ட வந்து நிக்கச் சொன்னேன். ஒரு பேக் நகர்ந்து தாண்டிய பின் தான் தெரிந்தது அது எங்கள் பேக் என.நான் அதன் பின்னே போக எத்தனிக்கும்போது என் பக்கத்தில் நின்றவன்,”நில்லுங்கோ.....திரும்பவும் வரும்...” அது வந்தது. எடுத்தேன். ஒரு அட்டைப் பெட்டியும்,பேக்கும் வரவில்லையே..!

அதோ வருகிறது....நாங்கள் கட்டிய கயற்றின் நிறம் அடையாளம் காட்டியது தூரத்தில் வரும்போதே.....பெட்டி வந்தது....கடைசியில் சிறிது நேரம் கழிந்து பேக்கும் வந்தது...அப்பாடா.....நிம்மதி பெரு முச்சு விட்டேன். நல்ல காலம்.....

ஒரு ட்றாலியை எடுத்து அதில் லக்கேஜையும் கையில் இருந்த பைகளயும் வைத்து வெற்றிப் புன்னகையோடு நகர்ந்தோம்.

நீண்ட வரிசை....அதன் பின்னே நாங்களும் போய் நின்றோம்...

Scan பண்ணும் இடத்தில எல்லாம் முடிந்து வெளியே வந்தோம்....எங்கள் கண்கள் தினேஷைத் தேடியது....கணட உடன் நான் அவளிடம் கூற அவள், தினேஷ் அன்னா நிக்கான் என கூறிக்கொண்டே வந்தாள்.

எங்கள் அருகே வந்ததும் தினேஷும் சுதாவும் காலைத்தொட்டு வணங்கி வரவேற்றார்கள்.

தினேஷின் பக்கத்தில் ஒருவர்....அவர் தான் தோவாளையில் இருந்து மாதவன்....அவர் குரலைப் போணில் கேட்டிருக்கேன்.....அவர் கார் இருக்கும் இடத்திற்கு சாமான்களை தினேஸும் மாதவனும் எடுத்து வர நாங்கள் அவர்கள் பின்னால் போய் காரில் ஏறினோம்.

மாதவன் என்னிடம் வெயில் எப்படி இருக்கு எனக் கேட்க நான் அடுப்பின் பக்கத்தில் நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கு என்றேன்.

கார் போய்க்கொண்டிருந்தது. 120 கிலோ மீட்டருக்கு மேல் இங்கே போகக்கூடாது.குறிப்பிட்ட சில இடங்களில் கேமரா இருக்கும்.அது கூடுதல் வேகத்தில் போனால் பதிவு செய்து 20 K.D Fine காரின் உரிமையாளர் கட்ட வேண்டியதிருக்கும்.

சாமியிடம் போன் பண்ணி அவரிடம் நான் குவைத்துக்கு வந்த விவரத்தைக் கூறினேன்.அவருடைய ஹோட்டல் உடுப்பி -க்கு ஓணச் சாப்பாட்டு-க்கு வரச் சொன்னார்.போய் அவரைப் பார்த்தோம்.அன்பாக உபசரித்தார்.கடுக்கரை ராஜேஷ்-ஐப் பார்த்து நலம் விசாரித்தேன். சாப்பிட்டோம்....நன்றாக இருந்தது...

தினேஷ் இருக்கும் மங்காஃப்-க்கு வந்து சேர்ந்தோம். 103-ம் நம்பர் 9 மாடிக் கட்டிடம் முன்னே கார் நின்றது. லிஃப்ட் -ல் போய் 8-ம் தளத்திற்குப் போனோம்.

மாதவன் விடை பெற்றுச் சென்றார்.

பேரன் கிட்ட வரவே இல்லை.

சோர்வும் நிம்மதியும் சேர்ந்தால் வருவது தூக்கம் தான்.

உறங்கினேன் நன்றாக........

No comments:

Post a Comment