என் மனதில் மலர்ந்த மலர்களையும் மலரும் நினைவுகளையும் நாளை எனது பேரன்கள் பார்த்து சிரிக்கவும் எனை நினைக்கவும் தனிமை என்னை வாட்டும் போதெல்லாம் இந்த வரிகள் என்னை இதமாக வருடவும் மாத்திரமே பதிவு செய்கிறேன்...... தங்கம்
Tuesday, September 20, 2011
நான் பாத்த மீன்சந்தை
நானும் மகாதேவனும் குவைத் சிற்றிக்கெல்லாம் சனிக்கிழமை சுற்றிப் பார்த்து வரும் வேளையில் இந்தக் கடல் பக்கம் போனோம். கடற்கரை என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குளத்தின் கரை போன்று அமைக்கப் பட்டிருந்தது. பிளாட்ஃபார்ம் அழகாக இருக்கிறது.வெயில் இருந்தாலும் அனல் இல்லா காற்றை அனுபவித்தேன்.குவைத்தின் நான் போன இடங்களிலேயே இந்த இடத்திலேயும் சிற்றியின் மற்ற சில இடங்களிலும் இதமான வெளிக்காற்று படும் சுகத்தை உணர்ந்தேன்.
அந்த நீண்ட பிளாட்பாரத்தில் நடந்து வந்தோம். கடல் அருகிலேயே ஆழம் கூடுதலாக இருக்கும் என அவர் சொன்னார். சிலர் அந்த வெயிலிலும் செயரில் இருந்து எதனையோ சிந்தித்து கொண்டிருந்தனர். நாங்கள் கடலின் உள்பக்கமாய் செல்லும் மரப் பாலத்தில் நடந்தோம்.அந்தப் பாலத்தின் மறுமுனையில் அந்த நாட்டுச் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.பாதி வரைப் போன நாங்கள் திரும்பி வெளியே வந்து நேரே எதிர் திசையில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தை நோக்கிச் சென்றோம். அது சூப்பர் மார்க்கட் போல் இருந்தது. குண்டூசியில் இருந்து நவீன 3D,H.D,LED TV,சோனி கேமரா,நிக்கான் ,கேனான் கேமரா, .....என்னவெல்லாமோ இருந்தன.பிரமிப்பு நீங்குவதற்குள் Fish Market-க்குப் போகலாமா என அழைத்துச் சென்றார்.
உள்ளே சென்று பார்த்தால்....பெரிய Hall-ல் சின்ன பக்கெட்டுகள் நிரம்ப காணப்பட்டன. அத்தனையிலும் மீன்கள் ஐஸ் கட்டிகழுடன்...அருகே சென்று பார்த்தேன்...நான் பார்த்ததில் எல்லாமே விரால் மீன்கள்....போட்டொ எடுத்தேன். அவற்றை ஏலம் போட்டு விப்பதாக அறிந்து கொண்டேன்.
பல விதமான மீன்கள்...நம்ம ஊர்ச்சந்தை என் கண்முன்னே தோன்றி என் மூக்கை என்னவோ செய்தது.நடந்து செல்லும் பாதையை ஒருவன் clean பண்ணிக் கொண்டிருந்தான்.வாங்கிய மீனைப் பச்சை கலர் ப்ளாஸ்டிக் கவரில் வைத்துக் கொடுக்கிறார்கள். நம்ம ஊரில் கறுப்புக் கலர் கவர்.....வாங்கிய மீனை வெட்டியும் கொடுக்கிறார்கள்...மீனை வெட்டித்தருபவர்கள் கையில் பிளாஸ்டிக் உறை...மிகவும் சுத்தமாக எல்லாமே இருந்ததைப் பார்த்து பிரமிப்பு...பிரமிப்பு... ஒரே பிரமிப்புதான் .
காரில் திரும்பினோம்....நாய் கிடையாதா...எங்கேயும் பாக்கல்லியே. மாடுகள் இல்ல...காக்கா
இல்ல...பூனை ,புறாக்கள் பார்த்தேன். ஒட்டகம் உண்டுமாம். நான் பாக்கல....
நம்ம ஊருல பெரிய கல்யாணம்னா எதை வைத்துச் சொல்வோம்....இங்கே எத்தனை ஒட்டகத்தை வெட்டுகிறார்கள் என்றக் கணக்கை வைத்துதான் பெரிய கல்யாணமா சின்னக் கல்யாணமா....சொல்வார்கள். பெண்களுக்குதான் வரதட்சணை கொடுப்பார்கள்....
எத்தனை பிள்ளைகள் வேணுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்....இன்னமும் என்னவெல்லாமோ தெரிந்து கொண்டேன்...
இந்த நாட்டு ஆண்கள் அவர்களுக்கே உரித்தான வெள்ளை உடை.தலையில் துணி.அதன் மேல் வட்டமாக கறுப்பு நிறக் கயிறு....
வெளிநாட்டவர்கள் தான் கூடுதலாக இருக்கிறார்கள்.
தமிழ்,மலையாளம் பேசும் மக்களை அதிகம் கண்டேன். எல்லாக்கடைகழுமே மலையாளிகள் தான் நடத்துகிறார்கள்.ஆனால் அதன் லீகல் உரிமையாளர் நிச்சயமாக ஒரு குவைத்தியாகத்தான் இருப்பார்....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment