என்ன...இண்ணைக்கு எழுத ஒண்ணும் இல்லையா என்ற என் மனைவியின் கிண்டல் என்னை மீண்டும் எழுதத் தூண்டியது.
என்னத்த எழுத ..........எழுதுவோம்...ரசிக்கும்படி இல்லேண்ணா டிலீட் பண்ணீரலாம்
கதை கேளு ...கத கேழு.....ஒரே ஒரு ஊரில ஒரே ஒரு பாட்டி.....
கடுக்கரையில் பொன்னம்மாள் என்று ஒரு பாட்டி இருந்தாள்.அந்தப் பாட்டியின் கணவர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வேலை பார்த்த அதிகாரி. இவர்களுக்கு ஒரே மகன்,4 மகள்.
கடைசி மகள் பாப்பாத்தி.
உள்ளூரிலேயே பாப்பாத்திக்கு கல்யாணம்.மாப்பிள்ளை ஆறும்பிள்ளை.
இவர்களுக்கு 3 மகன்கள் ,2 மகள்.
பாட்டியின் ஒரே மகன் என்பதால் மிக ஆடம்பரமாக மகனுக்கு திருமணம் நடந்தது....அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள்...அவள் பெயர் பொன்னம்மாள்....அந்தப் பாட்டியின் பெயர் தான் அது.
பொன்னம்மாளின் ஒன்றரை வயதில் அவளது அம்மா சுப்பம்மை ரெண்டாவது பிரசவத்தின் போது இறந்து போனாள்.
பொன்னம்மாளின் அப்பாவுக்கு மறுமணம் நடக்கிறது.....அவள் ஆச்சியின் பராமரிப்பில் வளர்கிறாள்....இறந்து போன அம்மைக்கு வீடும் நிலங்களும் உண்டு...அந்த அம்மையின் அம்மை வேலம்மையை கண்ணாடி ஆத்தாள் என எல்லோரும் சொல்வார்கள்.
கண்ணாடி ஆத்தாளுக்கு வேறு பிள்ளைகள் யாரும் இல்லாத நிலையில் அவளது மாப்பிள்ளையும் இறந்து போகிறார். இப்படிப்பட்ட நிலையில் அவளது சொத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் தாறுமாறாக மற்ற உறவினர்களால் செலவழிக்கப் பட்டது....
நிலங்களை மைனர் சொத்து என்பதால் விக்கவும் முடியாது.சொத்துக்கு வேண்டி பேத்தியை யாராவது என்னமாம் செய்து விடுவார்கள் என பயந்துபோய் தெரிசனம்கோப்புக்கு பொன்னம்மாளை கடுக்கரையில் தன்னுடன் வைத்து வளர்த்த பாட்டி அனுப்பவே மாட்டாள்.
கண்ணாடி ஆத்தாள் பேத்தியை பார்க்க ஆசைப்பட்டால் பேத்தியை அனுப்பி வைப்பார்கள்...பேத்தி வில்வண்டியில்தான் போவாள்....காலையில் போனால் சாயந்திரம் திரும்பி வந்துவிடுவாள்.ஆத்தாளைத் தவிர வேறு யார் யெது கொடுத்தாலும் பேத்தி சாப்பிடமாட்டாள்.....
பொன்னம்மாள் வளர்கிறாள்.பெரியவள் ஆகிறாள்.அவளது மதினி அதாவது பள்ளத்து அத்தையின் மகள் காளியம்மையும் தன்னுடனே வளர்கிறாள்.இருவருக்கும் மாப்பிள்ளை பார்த்தார்கள்.
காளியம்மைக்கு பார்த்த மாப்பிள்ளை கறுப்பு எனபதால் வேண்டாம் என பொன்னம்மாள் சொன்னதைக் கேட்டு வேறு மாப்பிள்ளைக்கும் அவளுக்கும் கல்யாணம் நடக்கிறது.
பொன்னம்மைக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள்....பெரியவர்கள் ஒரு மாப்பிள்ளையை
நிச்சயம் செய்தார்கள்.....அந்த மாப்பிள்ளை வேறு யாருமில்லை. கறுப்பு என ஒதுக்கப்பட்டாரே.... அந்த நபர்தான்....அவர் பப்பனா பிள்ள..
காலங்கள் சென்றன.கண்ணாடி ஆத்தாளுக்கு வயதானதால் ஏக வாரிசான பொன்னம்மாளின் நிலங்களைப் பாதுகாக்கணுமே அதுக்கு வேண்டி தெரிசனங்கோப்புக்கு நிரந்தரமாக தாமசத்துக்கு போகிறாள் பொன்னம்மாள் தன் கணவருடனும் பிள்ளைகளுடனும்.
கடுக்கரைப் பாட்டிக்கு ஒரே வருத்தம் தன் அருமைப் பேத்தி நம்மை வீட்டுப் போகிறாளே என.
அடிக்கடி வந்து பார்ப்பேன் என்று சொல்லிவிட்டுப் போனாள் பொன்னம்மாள்.
இன்னொரு பேத்தி காளியம்மை தாழக்குடியில் கல்யாணமாய் அங்கே வசித்து வந்தாள். காளியம்மைக்கு 4 ஆண்,5 பெண்.
பாட்டி தன் பேத்தி பொன்னம்மாளிடம், ‘நீ ஒன் மதினிக்கு நிறைய பிள்ள.அதனால அவ மகளில் ஒருத்தியை ஓம்மகனுக்குக் கட்டணும்.பாப்பாத்தியின் கடைசி மகனுக்கு ஒன் கடைசி மகளைக் கட்டணும்.அப்பம் நான் உசிரோட இருக்க மாட்டேன்....’.....எப்பமும் பாட்டியை பாக்க வரும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பாள்.
நல்ல ஆட்களின் வாக்குக்கு சாவு கிடையாது. 1963-ல் பாட்டி மரணத்தை தழுவினாள்.
1975-ல் பாட்டியின் ஆசைப்படியே இரண்டு கல்யாணமும் நடக்கிறது.
1975 மார்ச்சு மாதம் பாப்பாத்தியின் கடைசி மகனுக்கும் பொன்னம்மாளின் கடைசி மகளுக்கும் தெரிசனம்கோப்பில் வைத்து கல்யாணம் நடந்தது.
பொன்னம்மாளின் முதல் மகனுக்கும் காளியம்மையின் ஒரு மகளுக்கும் திருச்செந்தூர் முருகன் சன்னிதியில் கல்யாணம் நடந்தது.
பாப்பாத்தியின் கடைசி மகனது பெயர் பொன்னப்பபிள்ளை.
பொன்னம்மாளின் மகள் சுப்பம்மாள்.
திருமண போட்டோவில் மணமக்களின் பின்னால் இருந்த சுவரில் ஒரு உருவம் மணமாலையுடன் நின்று கொண்டிருந்த புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தது.
அந்த உருவம் தான் பாட்டி பொன்னம்மாள்.
No comments:
Post a Comment