தகரவீட்டு செல்லம்பிள்ளை(மாதேவன்பிள்ளை) மிக அழகாக ஆங்கிலத்தில் பேசும் திறமை உடையவர். அவர் சங்கீதம் இலக்கண சுத்தமாகப் பாடுவார். இராமாயணத்தை மிகவும் நேர்த்தியாக பொருள் கூறி விளக்குவார்.
கட்டியாபிள்ளையும் இவருடன் சேர்ந்து இராமாயணத்தை ராகத்துடன் பாடுவார்.
செல்லம்பிள்ளையின் மகள்கள் மீனாட்சியும் பிச்சம்மாளும்( பாஸ்கரனின் மனைவி)நன்றாகப் பாடுவார்கள்.
நிமிடக்கவி உடையார்பிள்ளையின் மகன்கள் இருவர் வில்லிசை பாடுவதில் வல்லவர்களாக இருக்கிறார்கள்.ஒருவர் கே.ஒ.தங்கப்பா. இவரது தம்பி கே.ஓ.மாதேவன்பிள்ளை.
தங்கப்பா நவாம் டி.எஸ்.ராஜமாணிக்கம் நாடகக் கமபெனியில் நடிகராக இருந்தவர்.
மாதேவன் பிள்ளை அவரது அப்பாவைப் போலவே கவி எழுதும் திறமையுள்ளவர்.
மேலத்தெரு கான். முத்தையன் பிள்ளை அம்மன் பாடலை வில்லிசையில் பாடுவார். அவர் இருந்தவரை சித்தூர் கோயிலில் அவர்தான் வில்லுப்பாட்டு பாடுவார்.
கடுக்கரை கிராமத்தில் வாழ்ந்த கோபால ஐயர் இராமாயண வரிகளை அழகாகப் பாடுவார்.
வடக்குத்தெருவில் வாழ்ந்த கம்பர் ராமன் பிள்ளை இராமாயணத்தைப் பாராமல் பாடுவார்.
இசை படித்தவரும் பாடவும் திறன் படைத்த பாஸ்கரனின் மகள் சொர்ணம் என்ற பொன்னம்மாள் பெருமாள் நடனம் பயின்று நாகர்கோவிலில் ‘ரோஷினி நாட்டியாலயா’ என்னும் நடனப்பள்ளியை நடத்தி வருகிறார். ஆண்டு தோறும் தன் தந்தையின் நினைவாக தியாகராஜ ஆராதனை நடத்தி நாஞ்சில் நாட்டு கலைஞர்களை கௌரவப்படுத்துவார்.
சொர்ணத்தின் மகள் நடனமாடத்தெரிந்தவள். டாகடர் ஸ்ரீகுமாரின் மகளும் நாட்டியமும் நன்றாகத் தெரியும். பாடவும் தெரியும். டாக்டரும் நன்றாகப் பாடுவார்.அவரது மகனும் நன்றாகப் பாடுவார்.
No comments:
Post a Comment